கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரி என் பிரசாந்தின் சஸ்பெண்ட் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியின் பணி இடைநீக்கம் நவம்பர் 6ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி வரை கூடுதலாக 180 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் ஏ.ஜெயதிலக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி, அப்போதைய கேரள கூடுதல் தலைமைச் செயலாளரும், தற்போதைய தலைமைச் செயலாளருமான திரு ஜெயதிலக் மற்றும் அப்போதைய தலைமைச் செயலர் சாரதா முரளீதரன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக திரு பிரசாந்த் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இடைநீக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


