பான் மசாலா விளம்பரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார். பிஜேபி தலைவரும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான இந்தர் மோகன் சிங் ஹனி, டைகர் ஜிந்தா ஹை நடிகருக்கு எதிராக, பினாமி விளம்பரம் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் மவுத் ஃப்ரெஷ்னர் பிராண்டிற்கு ஒப்புதல் அளித்ததாக புகார் அளித்துள்ளார் என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
கோட்டா நுகர்வோர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சல்மான் கான் மற்றும் பான் மசாலா பிராண்ட் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு முறையான பதில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது.அறிக்கையின்படி, சல்மான் கான் இடம்பெறும் பான் மசாலா பிராண்டின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்தர் மோகன் கோரியுள்ளார்.
ராஜ்ஸ்ரீ பான் மசாலாவின் விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக அவர் கூறியுள்ளார். ANI இடம் பேசிய இந்தர் மோகன், “சல்மான் கான் பலருக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.
இதை எதிர்த்து கோட்டா நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்து, விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மற்ற நாடுகளில், பிரபலங்கள் அல்லது திரைப்பட நட்சத்திரங்கள் கூட குளிர் பானங்களை விளம்பரப்படுத்துவதில்லை, ஆனால் அவர்கள் புகையிலை மற்றும் பான் மசாலாவை ஊக்குவிக்கிறார்கள்.
வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் பான் மசாலாவும் ஒன்று என்பதால், இளைஞர்கள் மத்தியில் தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். “.


